உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

1 தற்போது, என்னென்ன அம்மை நோய்கள் மக்களைத் தாக்குகின்றன?உஷ்ணத்தினால் அம்மை நோய் ஏற்படுகிறது. சின்னம்மை, மணல்வாரி அம்மை, பொன்னுக்கு வீங்கி, புட்டாலம்மை என்பன.2 அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன?அம்மை நோய் என்பது தொற்றுநோய். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து, வைரஸ் கிருமிகள் காற்றில் வெளியேறி, மற்றவர்களை தாக்குகின்றன. நோயாளியை தொடும்போது, அம்மை கொப்பளங்களிலிருந்து வரும், நிண நீர், மற்றவர்கள் மேல்பட்டால் கூட, இந்த நோய் தொற்றி கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.3 அம்மை நோய்க்கு தடுப்பு மருந்துகள், ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்கிறதா?ஆயுர்வேத மருத்துவத்தில், அம்மைக்கென்று தடுப்பு மருந்துகள் கிடையாது. ஆனால், வாழ்வியல் முறை மற்றும் உணவு முறை மாற்றங்களினால், இந்த நோய் வராமல் தடுக்க முடியும். அம்மை நோயின் தாக்கம், கோடை காலங்களில்தான் துவங்கும். எனவே, தண்ணீர் நிறைய குடித்து, சத்தான, குளிர்ச்சியான பழங்கள் காய்களை உண்ணும் பழக்கம் இருந்தாலே, அம்மை நம்மை அண்டாது.4 அம்மை நோய் வருவதை, முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?சின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை இருக்கும். பின் தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும், கொப்புளங்கள் வரும்.5 அம்மை நோய், குழந்தைகளை மட்டும் அதிகம் தாக்குகிறதே?நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை, இந்த நோய் எளிதில் தாக்கும். அதுமட்டுமில்லாமல், குழந்தைகள், விளையாட்டு நினைவிலேயே இருப்பதால், சரியாக உணவுகளை எடுத்து கொள்ளமாட்டார்கள். அதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதாலும் வரும். மேலும், மண்ணில் சுகாதாரமில்லாத இடங்களில் விளையாடுவதாலும், அம்மை நோய் தாக்கும்.6 அம்மை நோயின் போது என்ன செய்ய வேண்டும்?தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் மருத்துவரின் ஆலோசனையும், இந்த நோயில் இருந்து காப்பாற்றும். மேலும், அம்மை நோய் தாக்கத்தின் போது கிருமி நாசினியான மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை அரைத்து உடலில் தேய்த்து கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.7 அம்மை நோயின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்?உடலுக்கு உஷ்ணத்தை தரும் உணவுகள், அதிக காரம், புளிப்பு நிறைந்த உணவுகள், மாம்பழம், அன்னாசி போன்ற பழங்கள், கத்தரிக்காய், சேனைக்கிழங்கு மற்றும் கருணைக்கிழங்கு வகைகளை சாப்பிட கூடாது.8 அம்மை நோயின்போது, எந்த உணவை உண்டால், அதன் தாக்கம் குறையும்?மோர், இளநீர், வாழைப்பழம், கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய நுங்கு மற்றும் தர்பூசணி, மாதுளை போன்றவை எடுத்து கொள்ளலாம். பால் சாதம், மோர் சாதம் சாப்பிடலாம்.9 கர்ப்பிணிகளை அம்மை நோய் தாக்கினால், கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்குமா?நிச்சயமாக பாதிக்காது. ஆனால் அம்மை நோய் தாக்கிய கர்ப்பிணிக்குத்தான் எல்லா சிரமமும் இருக்கும். காரணம், அம்மை கொப்புளங்கள் நமைச்சலை ஏற்படுத்தும். மூச்சுவிடுவதில் சிரமமிருக்கும். சாப்பிட தோன்றாது.10 ஆயுர்வேத மருத்துவத்தில், அம்மை நோய்க்கான சிகிச்சைகள் என்ன?உணவு கட்டுப்பாடு பற்றி, நோயாளிகளுக்கு எடுத்துரைப்போம். சோற்றுக் கற்றாழை போன்ற இயற்கை பொருட்களில் ஆன, மருந்துகள் தருவோம். கொப்பளங்கள் அரிக்காமல் இருக்க, வேப்பிலைகளை அரைத்து, உடலில் தடவுமாறு ஆலோசனை கூறுவோம். படுக்கையில் கூட வேப்பிலை கொழுந்துகளை பரப்பி படுத்தால், நமைச்சல் ஏற்படாது. - ஜெ. ஜெயகுமாரி ஆயுர்வேத மருத்துவர்044 - 40064006


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்