முதுமைக்கு கட் ஆப் வயது 55
முதுமை என்பது நாம் அனைவரும் நினைப்பது போன்று, 70 வயதிற்கு மேல்தான் என்றாலும், உண்மையில் முதுமையின் ஆரம்பம் 55 வயதிலேயே துவங்கி விடுகிறது. அதுவரையிலும் எந்தவித உடல் பிரச்னைகளும் இல்லாமல் இருந்தாலும், 55 வயதில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, ஆர்த்ரைடீஸ், நுரையீரல் தொற்று என்று நம் வாழ்க்கை முறைக்கு ஏற்ப வரலாம்.ஐம்பத்தைந்து வயதை கடந்ததும், இத்தனை ஆண்டுகள் நம் உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தானே இருந்தது. இனியும் எதுவும் வராது என்று நினைக்கிறோம். அதற்கு, 2 - 4 ஆண்டுகளுக்கு முன், முழு உடல் பரிசோதனை செய்து, முடிவுகள் அனைத்தும் நார்மல் என்று வந்திருந்தால், இனி வாழ்நாள் முழுதும் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று அலட்சியமாக இருப்பவர்களே அதிகம்.எதிர்பாராமல் ஒரு நாள் மயக்கம் போட்டு விழும்போது, டாக்டரிடம் சென்றால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருக்கும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'செக் அப்' செய்தபோது, சர்க்கரை அளவு சரியாகத்தானே இருந்தது என்பர்.நெஞ்செரிச்சல் என்று வருவர். எதற்கும் ஈ.சி.ஜி., செய்துவிடலாம் என்று பார்த்தால், இதய செயல்பாட்டில் மாறுபாடு இருப்பது தெரியும். மேற்கொண்டு பரிசோதனையில், ரத்தக் குழாய் ஒன்றில் 40 சதவீதம் அடைப்பு இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்த எக்கோ பரிசோதனையில், என் இதயம் நன்றாகத் தானே இருந்தது என்பர்.ஏன் 55 வயதில் உடல் கோளாறுகள் வர ஆரம்பிக்கிறது என்றால், அது தான் முதுமையின் முதல் படி. இதற்கு, குறிப்பிட்டு சொல்லக்கூடிய காரணம் எதுவும் இல்லை. நம் ஆயுட்காலம், வாழ்க்கை முறையின் அடிப்படையில், முதுமை துவங்கும் 55 வயதில் தான் உடல் பிரச்னைகள் வருகின்றன என்பதை உறுதி செய்துள்ளனர்.போட்டித் தேர்வுகளுக்கு 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிப்பதை போன்று, புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலக சுகாதார மையம், 55 வயதை முதுமையின் கட் ஆப் வயதாக நிர்ணயம் செய்துள்ளது. 55 வயதிற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்திருந்தாலும், 55 - 65 வயதில், ஆண்டிற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.அதற்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்தால் போதும். 30 - 40 வயதில் சாப்பிட்ட உணவு, வாழ்க்கை முறையை 55 வயதில் தொடர முடியாது. உடலும், மனமும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்காது. வயதிற்கு ஏற்ப உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டியதும் முக்கியம்.பரிசோதனை எங்கள் மருத்துவமனையில், 'சீனியர்ஸ் கோல்டு கார்டு' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதில், 5,999 ரூபாய் செலுத்தி பதிவு செய்தால், ஆண்டிற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை, 24 மணி நேரமும் இலவச மருத்துவ ஆலோசனை, ஆறு சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை, மாதம் ஒரு முறை வீட்டிற்கே வந்து பரிசோதனை உட்பட பல சலுகைகள் இதில் கிடைக்கும். டாக்டர் சாய் மோகன், முதியோர் நல மருத்துவர், பீ வெல் மருத்துவமனை, சென்னை96983 00300 digitalhcs@bewellhospitals.in