உள்ளூர் செய்திகள்

"வாயில் எரிச்சலுக்கு காரணம், பான்மசாலாவா

பாக்கு, பான்மசாலா உபயோகிக்கும் பழக்கமுள்ள எனக்கு, சில மாதங்களாக வாயில் எரிச்சல் உள்ளது. வாயை திறப்பதே சிரமமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்?முதல் பாதிப்பான, 'பைப்ரோசிஸ்' என்னும் நோய் இது. வாயின் உள்புறம் வீக்கம், எரிச்சல் வரும். நாளாக, நாளாக வாயில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடும். இதனால், வாயை திறக்கவே கடினமாகும். உணவை விழுங்கும்போது வலி ஏற்படும். பாக்கு, பான்மசாலா, குட்கா போன்றவற்றை உபயோகிப்போரில் 75 சதவீதம் பேருக்கு இந்த நோய் கண்டிப்பாக வரும். அத்துடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், இரும்பு சத்து, வைட்டமின்கள் குறைவாக உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோய் வாய்ப்புற்றுநோயாக மாறிவிடக் கூடும். வாயில் இருந்து தொண்டைக்கும் பரவி, வலி அதிகமாகி விடும். பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைக்க வேண்டும். இரும்புச் சத்து, வைட்டமின்கள் நிறைந்த சத்தான உணவு உண்ண வேண்டும். தாடையில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை தினமும் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் ஸ்டீராய்டு மற்றும் தசைகளை தளர்த்த ஊசி போட வேண்டும். முன்பற்கள் தெற்றுப் பற்களாக இருந்ததால், எனது மகளுக்கு பல்சீரமைப்புக்கான கம்பி போடும் சிகிச்சை செய்தோம். எட்டு மாதங்களுக்குப் பின், மீண்டும் பற்கள் வெளியே தள்ளி உள்ளது போல தெரிகிறத? கோணலான பற்களையும், தெற்றுப் பற்களையும் சரியான இடத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்வதே கம்பிபோடும் சிகிச்சையின் முக்கிய நோக்கம். ஆனால் நகர்த்திய பற்களை, அதே இடத்தில் நிலையாக நிறுத்தி வைப்பதும் சிகிச்சையில் அதே அளவு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் பற்கள் நகர்ந்த பின்னும், அவற்றை சுற்றி ஈறுகளும், எலும்பும் உறுதியாவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். புதிய பல்வரிசைக்கு வாயில் உள்ள தசைகளும், நாக்கும் பழக வேண்டும். அக்குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சை முடிந்தாலும், 'ரீட்டைனர்' எனும் சாதனம் பொருத்த வேண்டும். விரல் சப்புவது, பல் கடிப்பது போன்ற பழக்கங்களால், பற்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய கம்பி போட வேண்டியிருக்கும். அப்பழக்கத்தை நிறுத்தவில்லை எனில், பற்களில் திரும்ப இடைவெளி வந்து விடும். ரீட்டைனர் என்பது கழட்டி மாட்டுவது போலவும், பற்களிலேயே ஒட்டிவிடுவது போலவும் இருக்கும். முதல் 4 மாதம் வரை முழுநேரம் அணிந்து, உபயோகிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும். - டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,மதுரை. 94441-54551


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்