உள்ளூர் செய்திகள்

தலைமுடி மாயமாகும் மாயம் என்ன?

தலைமுடி உதிர முக்கிய காரணம் ஒருவரின் கவலை தான். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும். அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும். தலைமுடி, இந்த இரண்டு வகையில் எந்த ''டைப்'' என்று தெரிந்து கொண்டால் தான் நாம் அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்தெடுக்க முடியும். ஆயில் முடியுள்ளவர்கள், அந்த ஆயிலை நீக்கி சீராக்கும் வகையில் உள்ள ''டீப் கிளீன்சிங்'' ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். வறண்ட தலைமுடி உள்ளவர்கள், கண்டிஷனர் தரம் அதிகம் உள்ளதும், எஸ்.எல்.இ.எஸ்., என்று அழைக்கப்படும் ரசாயனம் கலந்த ஷம்பூவை பயன்படுத்தினால் நல்லது.ஆண்களில் முடிகொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. வானிலை, தண்ணீர், கவலை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் தான் பலரின் வழுக்கைக்கு பின்னால் உள்ளவை. கோடை வெயில் பிளந்தாலும், அதிக பனி பெய்தாலும் சிலருக்கு ''முடி''வில்லா பிரச்னையாக தான் உள்ளது. கோடையில் வியர்த்து எண்ணெய் முடியாகி விடுவதும், பனிக்காலத்தில், முடிகள் வறண்டுபோவதும் இவர்களுக்கு நேர்வதுண்டு.எந்த சத்து தேவை?முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? ஒன்று; இரும்புச்சத்து. மற்றது; புரோட்டீன். இந்த இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றில் குறைபாடு இருந்தால், தலைமுடி கொட்டும்; ஆண்களுக்கு வழுக்கை ஏற்படும். சிலர் குண்டாக இருந்தாலும், ரத்தசோகை இருக்கும். அதுபோல, சிலருக்கு புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும். இவர்களுக்கு முடிகொட்டுவதை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம். அதுபோல, ரத்தத்தில் 'பெர்ரட்டின்' அளவை வைத்தே, ரத்த சோகை அளவை கண்டுபிடிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !