பிசிஓடியை தடுக்கும் யோகாசனம்!
தனி நபரின் தேவை, பிரச்னைகளுக்கு ஏற்ற வகையில் என்ன மாதிரியான யோகாசனங்களை செய்ய வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை பெற்றே பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று தான் இயற்கை மருத்துவம் கூறுகிறது. அப்படி செய்யும் போது பக்க விளைவுகள் இருக்காது; உடல் வலிமையடையும். தனி நபரின் தேவைக்கு ஏற்ப யோகா பயிற்சிகள் மாறுபடும். உயர் ரத்த அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், ஒரே மாதிரியான யோகா பயிற்சிகளை செய்ய முடியாது. நோயின் தன்மையின் அடிப்படையில் ஆசனங்கள் மாறுபடும். தினமும் யோகா செய்வதால், ஆரோக்கியமான பசி உணர்வு, துாக்கம், சீரான ஹார்மோன் செயல்பாடு, தளர்வான மூட்டு தசைகள், மன அழுத்தம், மன சோர்வு, பதற்றம் நீங்கும். நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இயங்கும். குழந்தைகள் யோகா பயிற்சி செய்வதால் கண் பார்வை மேம்படும்; நினைவுத் திறன் அதிகரிக்கும். உடல் பருமன் இல்லாமல், வயதிற்கு ஏற்ப சீரான உடல் எடை இருக்கும். தினசரி வாழ்க்கையில் ஒரு ஒழுங்குமுறையை கடைப்பிடிக்க உதவும். டீன்- ஏஜ் குழந்தைகள் தினமும் யோகா பயிற்சி செய்வதால், 'பிசிஓடி' எனப்படும் நீர்க்கட்டிகள், உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகள் இவற்றில் இருந்து விடுபடலாம். சுவாச பயிற்சி நம் சுவாசத்தை நாமே கவனிப்பதன் மூலம் மனதை கட்டுப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் முடியும். இதன் தொடர்ச்சியாக மகிழ்ச்சி உணர்வை தரும் ஹார்மோன்களான ஆக்ஸ்சிடோசின், டோபமைன், செரடோனின் அதிக அளவில் சுரக்கும்.இலவச யோகா தனிப்பட்ட முறையில் யோகாசனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியில், காலை 7:00 -- 12:00, மாலை 3:00 - -5:00 மணி வரையிலும் நேரில் வந்து கற்றுக் கொள்ளலாம். பேராசிரியை மங்கையர்க்கரசிஅரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை044 - 2957 2249alagamangai@gmail.com