உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / அம்மா வேண்டும்?

அம்மா வேண்டும்?

இயற்கையின் சீற்றமும்... தாயைப் பிரிந்த ஒரு பிஞ்சுக் உயிரும்!இயற்கை தனக்கென ஒரு கொடூரமான முகத்தைக் காட்டும் போது, மனித வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதை நொடிப் பொழுதில் உணர்த்திவிடுகிறது. நேபாள நாட்டின் ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும், அத்தகையதொரு ஆறா வடுவைத்தான் உலகிற்கு அளித்திருக்கிறது.பனிப்பாறை சரிவாலும் தொடர் கனமழையாலும் இமயமலையின் சிகரங்களிலிருந்து சீறிப் பாய்ந்த வெள்ள நீர், அப்பகுதியில் இருந்த கிராமங்களை ஒரே நொடியில் உருத்தெரியாமல் அழித்தது. அந்தப் பேரழிவின் நடுவே, மனித மனங்களை உலுக்கி எறிந்த ஒரு காட்சி—ஒன்றரை மாதப் பிஞ்சு உயிரின் மீட்பு!தாயின் அணைப்பில் இருக்க வேண்டிய பருவம்ஒன்றரை மாதம் மட்டுமே நிரம்பிய ஒரு குழந்தை என்பது, தாயின் மார்போடு ஒட்டி உறங்க வேண்டிய பருவம். தாயின் மூச்சுக்காற்றும், இதயத்துடிப்பும் மட்டுமே அக்குழந்தையின் முழு உலகமாக இருந்திருக்கும். ஆனால், விதி வேறு ஒரு கோர நாடகத்தை எழுதியது. மலைகளில் இருந்து திரண்டு வந்த வெள்ளமும் சேறும் வீடுகளை மூழ்கடித்த போது, பெற்ற தாயும் அக்குழந்தையும் பிரிக்கப்பட்டனர்.தாய் தன் குழந்தையைக் காப்பாற்ற எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கக்கூடும். வெள்ளப் பெருக்கில் தான் அடித்துச் செல்லப்படும் நிலையிலும், தன் குழந்தையின் உயிரைக் காக்க ஏதேனும் ஒரு பாதுகாப்பான மேட்டில் அதை வைத்திருக்கலாம். தாயின் அந்தப் போராட்டத்தின் விளைவோ என்னவோ, அந்தப் பிஞ்சு உயிர் வெள்ளத்தின் பிடியிலிருந்து தப்பியது. ஆனால், தன் அமுதம் புகட்டிய தாயையும், அரவணைத்த தந்தையையும் அந்தப் பிஞ்சு இழந்து நின்றது.கரம்பிடித்த இராணுவ வீராங்கனைசுற்றிலும் மரண பயமும், இடிபாடுகளின் சத்தமும் நிறைந்திருந்த அந்த இடத்தில், தாயற்ற அநாதையாய் அழுது கொண்டிருந்த அக்குழந்தையைக் கண்டெடுத்தனர் நேபாள இராணுவத்தினர். ஒரு வீராங்கனை அக்குழந்தையைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, வெள்ள நீரில் நீந்திச் சென்ற காட்சி, உலக மக்களின் நெஞ்சங்களை வெடித்துச் சிதற வைத்தது.தாயின் கதகதப்பைத் தேடி அழுத அக்குழந்தைக்கு, அந்த வீராங்கனையின் கரங்களே தாயின் அணைப்பாக மாறின. தன் பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா, தங்களை மீண்டும் தேடி வருவார்களா என்பது கூடத் தெரியாத அந்தப் பிஞ்சு, மீட்புக் குழுவின் பராமரிப்பில் மருத்துவ முகாமில் இருக்கிறது.இந்தக் குழந்தையின் தாய் எங்காவது உயிருடன் இருக்கவேண்டும் அவரை தேடிப்பிடித்து குழந்தையை அவருடன் சேர்ப்பிக்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அதிகாரிகள் முயற்சித்து எடுத்து வருகின்றனர் பிரார்த்தனைகள் பலிக்க வேண்டும்.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !