உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / 90 வயது சர்வதேச ஆணழகன்

90 வயது சர்வதேச ஆணழகன்

ஜப்பானைச் சேர்ந்த தோஷிசுகே கனாசவா, உலக அளவில் மிகவும் வயதான மற்றும் பிரபலமான பாடிபில்டர்களில் ஒருவர் . இளைய தலைமுறை பாடிபில்டர்களுக்கே சவால் விடும் வகையில் தனது உடற்கட்டை இவ்வளவு வயதிலும் மிகச் சிறப்பாகப் பராமரித்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கனாசவா தனது இளமைக் காலத்தில் பல போட்டிகளில் வென்றிருந்தாலும், சில தனிப்பட்ட காரணங்களால் பாடிபில்டிங்கிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார். பின்னர் தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு, தனது உடல்நலனைப் பேண மீண்டும் தீவிரமாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார்., 30 வயது இளைஞர்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட மேடைகளில் தனது சிக்ஸ் பேக் உடலமைப்பையும், தசைகளின் உறுதியையும் காட்டி நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவரது வியக்கத்தக்க சாதனையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகளும், போட்டிக் குழுவினரும் இவருக்குச் சான்றிதழ்களையும், சிறப்பு விருதுகளையும் வழிக் கௌரவித்துள்ளனர்.இவர் நீண்ட காலமாகத் தீவிரமான அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான பாரம்பரிய ஜப்பானிய உணவுகளான அரிசி, மிசோ சூப் , சோயாபீன்ஸ் மற்றும் காய்கறிகளை மட்டுமே உட்கொள்கிறார்.தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, முறையான தூக்கம் மற்றும் உடல் மீது அதீத அக்கறை செலுத்துவது இவரின் இளமையான தோற்றத்திற்கும் உறுதிக்கும் முக்கியக் காரணமாகும்.மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்குத் தோஷிசுகே கனாசவா ஒரு சிறந்த உதாரணம்!----எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ