உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / சாலுமரட திம்மக்கா வாழ்க்கை திரைப்படமாகிறது.

சாலுமரட திம்மக்கா வாழ்க்கை திரைப்படமாகிறது.

மரங்களின் தாய் என்று போற்றப்படும் சாலுமரட திம்மக்காவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது.இன்றைக்கு 113 வயதாகும் திம்மக்கா கர்நாடகா மாநிலம் டூம்கூரு மாவட்டம் குப்பி கிராமத்தில் பிறந்தவர்.விவரம் தெரிந்த நாள் முதல் மரங்கள் நட்டு வருகிறார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆலமரங்களை நட்டுள்ளார் வெறுமனே நடுவது மட்டுமின்றி அதை அன்றாடம் தண்ணீர் பாய்ச்சி தாய் போல வளர்த்தும் இருக்கிறார்.எந்தவித எதிர்பார்ப்புமின்றி மக்கள் நலனிற்காக சமூக வளர்ச்சிக்கான நாட்டு நலனிற்காக நடப்பட்ட இந்த மரங்களின் மதிப்பு இன்றைய தேதிக்கு 115 கோடி ரூபாய்க்கு மேலாகும்.உலகம் முழுவதும் பசுமையின் நாயகியாக அறியப்படுகிறார்.கணவர் இறந்துவிட்டார் குழந்தை இல்லை படிப்பறிவும் கிடையாது சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கினார் பின் தனது வாழ்க்கையையே மரங்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட திம்மக்காவிற்கு பத்மஸ்ரீ உள்ளீட்ட பல்வேறு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தின் மூலமாக திம்மக்கா அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முயற்சிகளை உலகளவில் பரப்புவதே குறிக்கோள் என்கின்றனர்இந்த படம் அவரது திம்மக்காவின் வாழ்க்கையை நன்கு பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக அவர் வாழும் கிராமத்திலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளனராம்.மரம் வளர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை கர்நாடகமாநிலத்தில் ஏற்படுத்திய திம்மக்காவின் திரைப்படம் அந்த உத்வேகத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jeyakumar
ஜூலை 09, 2025 17:33

நீங்கள் நெடுநாள் வாழ வேண்டும்


Karthik
ஜூன் 17, 2025 19:31

உம்மை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம் தாயே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை