உள்ளூர் செய்திகள்

தனித்தமிழ் போராளி

தேவநேயப் பாவாணர்சங்கரன்கோவில், திருநெல்வேலி7.2.1902 - 15.1.1981பன்மொழி வித்தகர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், மொழியியற் சிந்தனையாளர். தமிழின் விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு தன் இயற்பெயரைக்கூட மாற்றிக்கொண்டவர் 'மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணர். சிறந்த மாணவராக விளங்கிய பாவாணர், மேல்வகுப்புக் கல்வி முடித்து இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மேலும் சென்னை, மன்னார்குடி, திருச்சி என பல இடங்களில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தான் பணியாற்றிய இடங்களில் தமிழ் கற்க விரும்பியோருக்கு ஆர்வத்துடன் கற்றுக் கொடுத்தார். திருநெல்வேலியில் தென்னிந்திய தமிழ்ச்சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில், வெற்றி பெற்று தமிழில் தனது புலமையை நிரூபித்தார். அது மட்டுமன்றி இசைத்தமிழ் மீது ஈடுபாடாகி, இசைப்பா இயற்றுவதிலும் இசைக்கருவி இயக்குவதிலும் தேர்ச்சி பெற்றார்.1968இல் திருச்சியில் உலகத் தமிழ்க் கழகத்தைத் தொடங்கி, 4 மாநில மாநாடுகளை நடத்தினார். 'வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கையின் குறிக்கோள்' என்று சொன்னவர் பாவாணர். ஆங்கிலப் புலமை பெற்றிருந்தாலும், வாழ்நாள் முழுக்க தனித்தமிழிலேயே பேசினார்.நாமும் நம் தாய்மொழியான தமிழில் கற்று, பேசி, அதனைக் கொண்டாடுவதுதான் தமிழ் மொழிக்காக உழைத்த பாவாணருக்குச் செய்யும் நன்றிக்கடன்.முக்கியமான நூல்கள்: முதல் தாய்மொழி, திராவிடத் தாய், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, பண்டைய தமிழர், நாகரிகமும் பண்பாடும், இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்?, தமிழ்நாட்டு விளையாட்டு, பழந்தமிழாட்சி, திருக்குறள் தமிழ் மரபுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !