உள்ளூர் செய்திகள்

கணக்கும் இனிக்கும்

முகநூல் புதிர்!ராமு, அடிக்கடி முகநூல் பதிவுகளைப் பார்ப்பது வழக்கம்.ஒருநாள், 3x3 கட்டத்தில் ஒரு கணிதப் புதிரைப் பார்த்து வியந்தான்.கட்டத்தின் முதல் வரிசையில் 3, 5, 7 ஆகிய எண்களும், இரண்டாவது வரிசையில் 11, 13, 17 ஆகிய எண்களும், மூன்றாவது வரிசையில் 19, 23 மற்றும் ஒரு கேள்விக்குறியும் இருந்தன. பலரும், மூன்றாவது வரிசையில் கேள்விக்குறி இடப்பட்ட எண் 29 என்று விடை அளித்திருந்தனர். ராமுவுக்கு 29 எப்படி வந்தது என்று தெரியவில்லை.உங்களுக்குத் தெரியுமா?விடைகள்:முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசையில் அமைந்த எண்களை வரிசைப்படுத்திக் கவனித்தால், அனைத்தும் பகா எண்கள் என்று அறியலாம். அதன்படி, மூன்றாவது வரிசையில் வரும் மூன்றாவது எண் 29 ஆகும். (அதாவது, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !