உள்ளூர் செய்திகள்

களத்தில் கணக்கு: பகடை விளையாட்டு!

உங்கள் நண்பரிடம் இதுபோன்ற இரண்டு பகடைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.உங்களுக்குத் தெரியாதபடி, அவற்றை உருட்டச் சொல்லுங்கள். ஒவ்வொரு பகடையிலும் வரும் எண்களைக் குறித்துக்கொள்ளச் சொல்லுங்கள்.இரண்டு எண்கள் வந்திருக்கும். அதில், ஏதேனும் ஓர் எண்ணை 2 என்ற எண்ணால் பெருக்கச் (Multiply) சொல்லுங்கள். பின், வந்த விடையுடன் 5ஐ கூட்டி, மீண்டும் வந்த விடையை 5 உடன் பெருக்கச் சொல்லுங்கள்.இப்போதும் ஒரு விடை வந்திருக்கும். அதனை, இன்னொரு பகடையில் வந்திருந்த எண்ணுடன் கூட்டி, பின், வந்த விடையில் 25ஐ கழித்த எண்ணைக் கேளுங்கள்.அவர் சொன்ன ஈரிலக்க எண்களைப் பிரித்துச் சொல்லுங்கள். அதுதான் பகடையில் விழுந்த இரு எண்கள் என்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !