அற்புத ஆங்கிலம்: இந்த ஆண்டின் சிறந்த சொல் - brat
ஒவ்வொரு அகராதி தயாரிப்பு நிறுவனமும் 'ஆண்டின் சிறந்த சொல்' ஒன்றைத் தேர்வு செய்யும். அதுபோல், காலின்ஸ் அகராதியின் ஆசிரியர் குழுவினர், இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தேர்வு செய்திருப்பது, 'பிராட்' (Brat). வழக்கமாக இந்த ஆங்கிலச் சொல்லுக்கு 'தொல்லை தரும் குழந்தை' என்று தான் அர்த்தம் சொல்லப்பட்டது.ஆனால், 2024இல் இந்தச் சொல்லுக்குப் புது அர்த்தம் கிடைத்திருக்கிறது. சார்லி எக்ஸ்சிஎக்ஸ் என தொழில் ரீதியாக அறியப்படுபவர், சார்லோட் எம்மா ஐட்சிசன். இவர் ஆங்கில பாடகி, பாடலாசிரியர். இவரது பாடல் தொகுப்பு ஒன்றுக்கு 'பிராட்' என்று பெயர் வைத்தார். அது இளைஞர்களிடம் மிகவும் புகழ்பெற்றதோடு, கலாசார ரீதியாக முக்கியமான சொல்லாகவும் மாறிப் போனது. அதாவது, 'தன்னம்பிக்கை, சுதந்திரம் மற்றும் இன்பவியல் நடத்தையைக் குறிக்கும்' சொல்லாக 'பிராட்'க்குப் புது அர்த்தம் கிடைத்தது.அந்தச் சொல்லைத் தான் காலின்ஸ் அகராதி தேர்வு செய்திருக்கிறது.