உள்ளூர் செய்திகள்

சென்னை புத்தகக் கண்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 39ஆ-வது சென்னை புத்தகக் கண்காட்சி தீவுத் திடலில் ஜூன் 1ல் தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் 700 அரங்குகளில் 10 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு பெய்த பெருமழை காரணமாகத் தள்ளிப்போனது. சென்னை புத்தகக் கண்காட்சி ஜூன் 13ஆம் தேதிவரை நடைபெறும். தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணிவரை பார்வையிடலாம். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கே துவங்கும். தமிழ், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், கன்னட நூல் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !