சாலைகளை உறுதியாக்கும் சிகரெட் பஞ்சு
சிகரெட் புகைத்த பிறகு தூக்கி எறியப்படும் பஞ்சுத் துண்டுகள், நில மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 13 கோடி டன் அளவுக்கு சிகரெட் குப்பைகள் சேர்கின்றன. இவற்றைக் கையாள ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதுவழியைக் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக, ஆய்வுக்குழு தலைவர் அப்பாஸ் மொகாஜரணி கூறியதாவது, 'மெழுகு, தார் உள்ளிட்டவற்றோடு, சிகரெட் பஞ்சுகளையும் சேர்த்து, உறுதித்தன்மை கொண்ட சாலை அமைக்க முடியும். சாலைகளில் இருந்து வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கவும், சிகரெட் பஞ்சு உதவுகிறது. சிகரெட் கழிவுகளை கையாளும் சிக்கலுக்கு இது பெரும் தீர்வாக அமையும்.' என்று தெரிவித்துள்ளார்.