உள்ளூர் செய்திகள்

திறன் குறைகிறதா?

பொதுவாக மரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகின்றன என்பதை அறிவோம். காடுகளில் இத்திறன் குறையத் தொடங்கியுள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அமேசான், ஆப்பிரிக்கக் காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துள்ளனர்.1990இல் காற்றிலிருந்து 4,600 கோடி டன் கரியமில வாயுவை உறிஞ்சிய காடுகள், 2010இல் 2,500 கோடி டன் கரியமில வாயுவையே உறிஞ்சி உள்ளன. புவி வெப்பமயமாதல், காடுகளில் நீர் வறட்சி போன்றவற்றால் கரியமில வாயுவின் உறிஞ்சு திறனை மரங்கள் வெகுவாக இழந்து வருவதாகக் கவலையுடன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !