களத்தில் கணக்கு - போட்டித் தேர்வு கணக்கு!
ஒரு மாணவர் போட்டித் தேர்வு ஒன்றில் பங்கேற்றார். 'தெரிவு வினா விடை' வகையில் அமைந்த 90 கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன.தேர்வில், ஒவ்வொரு சரியான விடையைத் தெரிவு செய்வதற்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், தவறான தெரிவுக்கு 2 மதிப்பெண்கள், எடுத்த மதிப்பெண்ணிலிருந்து குறைக்கப்பட்டன. தேர்வில், 90 கேள்விகளையும் தெரிவுசெய்த அந்த மாணவர், எடுத்த மொத்த மதிப்பெண் 387. எனில், மொத்தம் எத்தனைக் கேள்விகளுக்கு அவர் தவறாகப் பதில் அளித்து இருப்பார்?விடை: 9தேர்வில், சரியான விடையைத் தெரிவுசெய்த கேள்விகளின் எண்ணிக்கையை x என்க. தவறாகத் தெரிவுசெய்த கேள்விகளின் எண்ணிக்கையை 90--x என்க.ஆக, கொடுக்கப்பட்ட தகவலின்படி,5x -- 2(90-x) = 387 எனலாம்.5x - 180 + 2x = 3877x - 180 = 3877x = 387 + 1807x = 567x = 81 ஆக, மாணவர் சரியான விடையைத் தெரிவுசெய்த கேள்விகளின் எண்ணிக்கை = 81.எனவே, தவறாக பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கை = 90 - 81 = 9.