இலவச அறுவை சிகிச்சை டில்லி அரசு புதுத்திட்டம்!
புதுடில்லியில் வாழும் ஏழை மக்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வகையில், 41 தனியார் மருத்துவமனைகளுடன் அம்மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், வரிசைப்படி, அவசர சிகிச்சைகளுக்கும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், ஏழைகள் பயன்பெறும் வகையில், தனியார் மருத்துவமனைகளுடன் டில்லி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இத்திட்டம் மூலம், கண்புரையை அகற்றும் சிகிச்சை, சைனஸ், காது கேளாமை போன்ற 30 முக்கிய அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகல் ஏழைகள் செய்து கொள்ளலாம்; இதற்கு கட்டணம் கிடையாது.