உள்ளூர் செய்திகள்

தவளைக் கதை!

உங்களில் சில பேருக்காவது இந்தத் கதை தெரிந்திருக்கும். ஒரு விஞ்ஞானி தவளை ஒன்றை ஆராய்ச்சிக்காக வளர்த்தார். 'ஜம்ப்' என்று சொன்னதும் அது குதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். ஒருநாள் தவளையைத் ஆராய்ச்சி மேஜை மேல் வைத்தார். அதன் ஒரு காலை வெட்டிவிட்டு 'ஜம்ப்!' என்றார். தவளை குதித்தது. இரண்டாவது காலை வெட்டி விட்டு ஜம்ப் என்றபோது அது கஷ்டப்பட்டுக் குதித்தது. மூன்றாவது காலை வெட்டிவிட்டு ஜம்ப் என்றதும் கஷ்டப்பட்டு நகர்ந்தது. நான்காவது காலையும் வெட்டிவிட்டு 'ஜம்ப்' என்று கூறினார். தவளை இம்மி கூட நகரவில்லை. அவர் ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினார். 'நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் தவளை செவிடாகப் போய்விடுகிறது.'சரி. இந்த நகைச்சுவைக் கதையை விடுங்கள். தவளையை அறுத்துக்கொண்டிருந்தபோது மிக முக்கியமான உண்மை ஒன்றைக் கண்டடைந்த விஞ்ஞானி ஒருவர் உண்டு. இத்தாலி நாட்டைச் சேர்ந்த உள்ளமைப்பியல் பேராசிரியர் லூஜ் கால்வானி(Luigi Galvani). 'விலங்குகளின் நரம்புகளிலும் தசைகளிலும் மின்சார தூண்டல்கள் இருக்கின்றன' என உலகுக்குச் சொன்னார் இவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !