தங்கம் வென்ற தமிழக மங்கை!
ஐஸ்லாந்து நாட்டில் நடந்த, சர்வதேச சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று, தமிழக வீராங்கனை பவானி தேவி சாதனை படைத்துள்ளார். உலக அளவில் வாள் வீச்சில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. பவானி சென்னையைச் சேர்ந்தவர். தங்கம் வென்று சாதித்தது குறித்து அவர் கூறும்போது, 'ஆசிய அளவிலும், காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வென்றிருந்தாலும், சர்வதேச அளவில் நான் வென்றுள்ள முதல் பதக்கம் இது. இறுதிப் போட்டியில் என்னை எதிர்த்து விளையாடிய பிரிட்டிஷ் வீராங்கனைகள் மிகுந்த சவாலாக இருந்தனர். கடினமான இப்போட்டியில், பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார். அடுத்ததாக, மாஸ்கோவில் நடைபெறவுள்ள, கிராண்ட் ஃபிக்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார் பவானி.