உள்ளூர் செய்திகள்

எங்கும் மகிழ்ச்சி!

திருநாள் வந்தால் கொண்டாட்டம்தீபாவளியால் சந்தோசம் ஒருநாள் ஆண்டில் வருகிறதாம்ஊரே மகிழ்ந்து திளைக்கிறதாம்புத்தாடைகள் அணிவதற்கும் பொங்கும் மகிழ்வைப் பகிர்வதற்கும் பட்டாசுகளை வெடிப்பதற்கும் பண்டிகை நாளும் வருகிறதாம். வானில் ஒளிரும் வாணங்கள்மண்ணில் பொறியும் மத்தாப்புதானாய்ச் சுழலும் சக்கரங்கள்தட்தட்டென்னும் வெடிவகைகள்பலகாரங்கள் சுடுகின்றோம்பலர்க்கும் கொடுத்து மகிழ்கின்றோம்நல்வாழ்த்துகளைப் பகிர்கின்றோம்நாளும் மலர்ந்து சிரிக்கின்றோம்தீபம் ஒளிரும்; நல்லொளியால்தீமை எரிந்து அகன்றுவிடும்;யாவும் நலமாய் மாறிவிடும்;எங்கும் மகிழ்ச்சி தங்கிவிடும். - மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !