உள்ளூர் செய்திகள்

நாட்டு ரகங்களை மறந்துவிட்டோமா?

இந்தியாவில் உள்ள உள்நாட்டுக் கால்நடை மற்றும் பண்ணை விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், ஆடு மற்றும் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டுக் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, கால்நடைகள் பற்றிய 20வது கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.1919-ஆம் ஆண்டிலிருந்து கால்நடைகளுக்கான கணக்கெடுப்பு, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகிறது. இருபதாவது கணக்கெடுப்பு, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றிருக்கிறது. 2007ஆ-ம் ஆண்டு எடுத்த உள்நாட்டுக் கால்நடைகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இருந்த மொத்தக் கால்நடைகளின் எண்ணிக்கை 52.8 கோடி. 2012-இல் இந்தக் கால்நடைகளின் எண்ணிக்கை 5.12 கோடியாகக் குறைந்தது. தற்போதைய கணக்கெடுப்பின்படி, மொத்தக் கால்நடைகளின் எண்ணிக்கை 53.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்படிக் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு நாம் மகிழ்ச்சியடைய முடியாது. ஏனென்றால் இவற்றில் 95 சதவீதக் கால்நடைகள் செம்மறியாடு மற்றும் ஆடு போன்றவை மட்டுமே.செம்மறி ஆடுகள் 2007-இல் நடந்த கணக்கெடுப்பின்படி, 7.15 கோடி செம்மறி ஆடுகள்தான் இருந்தன. ஆனால், 2012-இல் அதன் எண்ணிக்கை, 6.5 கோடியாகக் குறைந்தது. இதுவே 2018இ-ல், 7.42 கோடியாக அதிகரித்திருக்கிறது.ஆடுகள்2007-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 14.05 கோடி ஆடுகள் இருந்தன. 2012இ-ல் 13.51 கோடி ஆடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, 14.88 கோடி ஆடுகள் இருக்கின்றன.அதேசமயம், மற்ற கால்நடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தே வருகிறது. குஜராத்தின் 'கன்க்ரேஜ் மாடுகள்,' சிவகங்கையின் 'புலிக்குளம் மாடுகள்,' 'காங்கேயம் பசுக்கள்,' ஆந்திரத்தின் 'ஒங்கோல் பசுக்கள்' போன்றவற்றின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கணக்கெடுப்பின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வளர்க்கப்படும் வெளிநாட்டுக் கால்நடைகளின் எண்ணிக்கை, 2007-ஆம் ஆண்டு 3.3 கோடியாக இருந்தது. 2012இல் 3.97 கோடியாக அதிகரித்து, தற்போது 14.21 கோடியாக உள்ளது.சவால்கள்1. பதிவு செய்யப்படாத இறைச்சி உற்பத்தி நிறுவனங்கள் பெருகியுள்ளன. 2. கால்நடைகள் வளர்ப்பவர்கள் சுகாதாரமான சூழலில் வளர்ப்பதில்லை.3. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்றுகள், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்ற தகவல், ஆய்வறிக்கையில் இதுவரையில் இல்லை.4. இந்தியாவும் மற்ற நாடுகளைப்போல, அதிகப்படியான பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் செய்கிறது. 5. சந்தைப்படுத்துதல் எளிமையாக இல்லை. கிடைக்கும் வருமானம் குறைவு என்பதால், தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த முடிவதில்லை. - சு.கவிதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !