உள்ளூர் செய்திகள்

நான் சிங்கம் இல்ல, குரங்கு

தென்னிந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரியவகை உயிரினம், சிங்கவால் குரங்கு. சிங்கத்தைப் போல தலையைச் சுற்றி பிடரியும், நீண்ட வாலின் நுனியில் முடியும் காணப்படுவதால், இதற்கு இந்தப் பெயர். இவற்றைப் பற்றி சில தகவல்கள் : * காடுகளில், மரங்களின் உச்சியில் வசிக்கும் இவை, பழங்கள், காய்கள், விதைகள், இலைகள், பூச்சிகளை சாப்பிடுகின்றன. * பல்வேறு வகையான பழங்களை சாப்பிட்டு, விதைகளைப் பரவலாக்கம் செய்வதால், காடுகளின் வளத்தை அதிகரிப்பதில் இவற்றிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.* பிற இனங்களுடன் சேராமல் தனி கூட்டமாக வாழும் இயல்புடையவை. * 15 முதல் 20 குரங்குகள் இருக்கும் ஒரு கூட்டத்தை, ஆண் குரங்கு வழிநடத்தும். * காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதால் போதுமான பழங்கள் கிடைக்காமல் இவற்றின் உணவுப் பழக்கம் மாறி வருகிறது.* காட்டுப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் வழங்கும் பிஸ்கெட், சிப்ஸ் போன்ற உணவுக்கு பழக்கப்படத் தொடங்கிவிட்டது. இதனால் இவற்றின் இரை தேடும் பழக்கம் மறக்கக்கடிக்கப்படுகிறது. * காட்டு வளம் குறைந்து வருவதால், இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவின் அரியவகை விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !