சச்சினுக்கு ஐ.சி.சி. விருது
கிரிக்கெட்டில் சாதித்த நட்சத்திரங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், சர்வதேசக் கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) சார்பிலான 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்படுவர். ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்படும் இவ்விருது, வீரர்களுக்கு மிகப் பெரிய கௌரவமாக உள்ளது. உலக அரங்கில் 16 வயதில் களமிறங்கி 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர் சச்சின் (46 வயது) இப்பட்டியலில் சேர்க்கப்பட்டார். இவருக்கு 'ஃப்ரேம்' செய்யப்பட்ட தொப்பி, ஐ.சி.சி. சார்பில் வழங்கப்பட்டது.டெஸ்ட்: 51 சதங்கள் - 15,921 ரன்கள்ஒருநாள்: 49 சதங்கள் - 18,426 ரன்என 'சதத்தில்' சதம் அடித்துச் சாதனை படைத்த ஒரே வீரரான சச்சின், மூன்று விதக் கிரிக்கெட்டிலும் சேர்த்து 34,357 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் இப்பட்டியலில் இடம் பிடித்த 6வது இந்திய வீரர் ஆனார். ஏற்கெனவே பிஷன் சிங் பேடி (2009), கபில் தேவ் (2009), கவாஸ்கர் (2009), அனில் கும்ளே (2015), ராகுல் டிராவிட் (2018) இந்தக் கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.