உள்ளூர் செய்திகள்

சுரங்க ஏலத்தால் மாநிலங்களுக்கு வருவாய்

சுரங்க ஏலத்தின் மூலம், பல இந்திய மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.59,500 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் மாநிலங்களில் இருக்கும் சுரங்கங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. மொத்தம் உள்ள 76 சுரங்கங்களில், 47 சுரங்கங்களுக்கான ஏலம், முதல் கட்டத்தில் நடைபெற்றது. தற்போது, இரண்டாவது கட்டமாக 29 சுரங்கங்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. பத்து பெரிய நிறுவனங்கள் கர்நாடகத்தில் 7, சத்தீஸ்கரில் 3, ஜார்க்கண்டில் 2, ஆந்திரம், ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 1 என மொத்தம் 16 சுரங்கங்களை 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !