சுதந்திர தினக் கொண்டாட்டம்
ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய சுதந்திர தினவிழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ஏழை குடும்பங்களின் மருத்துவச் செலவுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், தியாகிகள் ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.