இந்தியாவின் முதல் பயோ டீசன் பேருந்து!
இந்தியாவின் முதல் உயிரி எரிபொருள் (Bio Diesel) பேருந்து பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுகிறது. டீசல், பெட்ரோல் ஆகிய எரிபொருள்களுக்கு அவ்வப்போது தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்கும் விதத்தில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உயிரி எரிபொருள் (Bio Diesel) பயன்படுத்தி இயங்கும் பேருந்து சேவையை கர்நாடக அரசு தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக, பெங்களூருவில் இருந்து சென்னைக்குச் செல்கிறது இந்த பயோ டீசல் பேருந்து. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாடு முழுவதும் உயிரி எரிபொருளில் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டியது அவசியம்.