உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: மன்னர்களின் நீச்சல் குளம்

படத்தில் உள்ள நீச்சல் குளம், தென்னிந்திய மாநிலம் ஒன்றில் உள்ளது. குளம் என்பதை விடவும் ஒரு மாளிகை என்று கூறலாம். சுற்றிலும் தூண்களுடன் எண்கோண வடிவில் (Octagonal) கட்டப்பட்டுள்ளது. மேற்கூரை இன்றி வான்பார்த்து உள்ளது. குளத்தின் நடுவிலும் எண்கோண மேடை உள்ளது.இந்த நீச்சல் மாளிகை பொது யுகம் 1565ஆம் ஆண்டு, தக்காண சுல்தான்களால் போரில் சிதைக்கப்பட்டது. பின்னர் 1800ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தக் குளம் கண்டறியப்பட்டுச் சீர்செய்யப்பட்டது.குளத்தில் உள்ள நீர் அசுத்தமாகி விட்டால், அதை வெளியேற்றுவதற்குக் குளத்தைச் சுற்றிலும் சிறுசிறு துளைகள் உள்ளன. அரசர்களைக் காண வரும் நட்பு நாடுகளைச் சேர்ந்த மன்னர்களும் இந்தக் குளத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்குவதற்கான மாளிகைகளும் குளத்தைச் சுற்றி இருந்துள்ளன. கட்டடங்களின் சிதைவுகள் மட்டுமே தற்போது மிச்சம் உள்ளன.மன்னர் காலத்தைச் சேர்ந்த இந்த நீச்சல் குளம், எந்த மாநிலத்தில், எந்த இடத்தில் உள்ளது?விடை: கர்நாடக மாநிலம், ஹம்பி.சரித்திரம் பழகு: மன்னர்களின் நீச்சல் குளம்படத்தில் உள்ள நீச்சல் குளம், தென்னிந்திய மாநிலம் ஒன்றில் உள்ளது. குளம் என்பதை விடவும் ஒரு மாளிகை என்று கூறலாம். சுற்றிலும் தூண்களுடன் எண்கோண வடிவில் (Octagonal) கட்டப்பட்டுள்ளது. மேற்கூரை இன்றி வான்பார்த்து உள்ளது. குளத்தின் நடுவிலும் எண்கோண மேடை உள்ளது.இந்த நீச்சல் மாளிகை பொது யுகம் 1565ஆம் ஆண்டு, தக்காண சுல்தான்களால் போரில் சிதைக்கப்பட்டது. பின்னர் 1800ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தக் குளம் கண்டறியப்பட்டுச் சீர்செய்யப்பட்டது.குளத்தில் உள்ள நீர் அசுத்தமாகி விட்டால், அதை வெளியேற்றுவதற்குக் குளத்தைச் சுற்றிலும் சிறுசிறு துளைகள் உள்ளன. அரசர்களைக் காண வரும் நட்பு நாடுகளைச் சேர்ந்த மன்னர்களும் இந்தக் குளத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்குவதற்கான மாளிகைகளும் குளத்தைச் சுற்றி இருந்துள்ளன. கட்டடங்களின் சிதைவுகள் மட்டுமே தற்போது மிச்சம் உள்ளன.மன்னர் காலத்தைச் சேர்ந்த இந்த நீச்சல் குளம், எந்த மாநிலத்தில், எந்த இடத்தில் உள்ளது?விடை: கர்நாடக மாநிலம், ஹம்பி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !