உள்ளூர் செய்திகள்

குடும்ப பிணைப்பிருந்தால் அதிக ஆயுட்காலம்

குழந்தைகள் உள்ளவர்கள், குழந்தைகள் இல்லாதவர்களைவிட அதிக ஆயுளுடன் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்வீடன் நாட்டில், கடந்த 1911ம் ஆண்டு முதல் 1925ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்களின் ஆயுட்காலத்தை, கரோலின்ஸ்கா (Karolinska) கல்வி நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் தெரிய வந்ததாவது, 'குழந்தைகள் இல்லாதவர்களைவிட, குழந்தைகள் உள்ளவர்கள் அதிக ஆயுளுடன் உள்ளனர்.வயதான காலத்தில், குழந்தைகளிடமிருந்து ஆதரவு பெறுவது, அவர்களின் ஆயுட்கால அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த மற்றொரு ஆய்வொன்றில், வயதான பெற்றோர்களுடன் பிள்ளைகள் அதிக நேரத்தைச் செலவிடும்போது, அவர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !