உள்ளூர் செய்திகள்

கடல்சார் வணிக தின விழா

இந்தியாவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 5ல் மும்பையிலிருந்து லண்டனுக்கு எஸ்.எஸ். லாயல்டி என்ற பயணிகள் கப்பல், வணிக ரீதியாக முதல்முறையாக இயக்கப்பட்டது. இது நேஷனல் மரைன் அகாடமியில் பதிவு செய்யப்பட்டது. இந்த தினம் கடல்சார் வணிக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இந்த ஆண்டு கடல்சார் வணிக தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, இழுவைக் கப்பல்கள் அணிவகுத்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. பின் புதிய துறைமுகத்தில் கடற்படையினரின் அணிவகுப்பும் நடந்தது. பொதுமக்கள் துறைமுகத்தைப் பார்வையிட்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !