மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக
1. பல்வேறு ராகங்களின் கலவையில் உருவான கீர்த்தனை _______________ என்று அழைக்கப்படுகிறது.2. கர்நாடக சங்கீதத்தின் தந்தை என அழைக்கப்படும் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசை மேதை _______________3. இந்துஸ்தானி இசை _______________ கலாசாரத்தில் இருந்து வந்தது.4. கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகள் சிலவற்றின் இறுதியில் ஹிந்துஸ்தானி பூர்விகம் கொண்ட _______________ பாடப்படும்.5. நாதஸ்வரத்தின் கம்பீர இசையை உணர்த்தும் ராகம் _______________6. புரந்தர தாசர் கீர்த்தனைகள் அதிகமாக எழுதப்பட்ட மொழிகள் _______________, _______________7. தன் இசை மாணவர்களுக்கு புரந்தர தாசர் உருவாக்கிய முக்கியப் பயிற்சிப் பாடம் _______________8. புரந்தர தாசர் இயற்றிய வைஷ்ணவ நூல் _______________9. தியாகராஜர் சமாதி அடைந்த இடம் _______________10. தியாகராஜர் இசையமைத்த ஆயிரம் தெலுங்கு கீர்த்தனைகள் அரங்கேற்றப்பட்ட இடம் _______________விடைகள்:1. ராகமாளிகை2. புரந்தரதாசர்3. பெர்சிய (தற்போதைய ஈரான் கலாசாரம்)4. தில்லானா5. கம்பீர நாட்டை6. கன்னடம், சமஸ்கிருதம்7. ஸ்வராளி பல்லவி8. பாகவத புராணம்9. திருவையாறு10. தஞ்சாவூர் அரண்மனை