நொடியை நூறுகோடியாக வகுக்கும் நாசா கடிகாரம்
ஒரு நொடியை நூறு கோடியாக வகுத்தால் என்ன கிடைக்குமோ, அதை துல்லியமாகக் கண்டறிந்து அளவிடும் கடிகாரத்தை, நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆறு பச்சை நிற லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு இயங்கும் வகையிலான இக்கடிகாரம், வரும் 2018ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாசா விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, 'ஒளி மிக வேகமாகப் பயணிக்கும் நிலையில், மிகச்சரியாக அதனை அளக்க, உயர்திறன் வாய்ந்த கடிகாரம் வேண்டும். நாங்கள் உருவாக்கியுள்ள கடிகாரம், நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதியையும் அளக்கும். அதைப் பயன்படுத்தி, விண்வெளிக்கும் கோள்களின் மேற்பரப்புக்கும் இடையேயான தொலைவை துல்லியமாகக் கண்டறிய முடியும். இதனால், கடல் பனிப்பாறைகள், மலைகள், காடுகளின் உயரத்தை முன்பைவிட துல்லியமாகக் கணக்கிடலாம்' என்றார்.