வேணுமா வீட்டுப் பாடம்?
மாணவர்:தினமும் பள்ளி வருகின்றோம்,திகட்டத் திகட்டக் கற்கின்றோம்சினத்தால் நீங்கள் அடித்தாலேசிணுங்கிக் கொண்டும் ஏற்கின்றோம்!மாலை ஆனதும் எங்களையேமறுநாள் வரைக்கும் சுதந்திரமாய்வேலை இன்றித் திரிந்திடவேவிட்டால் என்ன ஆகிவிடும்?வீட்டுப் பாடம் என்கின்றவெள்ளம் தன்னில் மூழ்குவதால்ஆட்டம் போடும் வயதினிலேஅய்யா வீட்டுள் கிடக்கின்றோம்!புத்தகம் கற்கச் சிலமணிகள்,புவனம் பார்த்திடச் சில நொடிகள்வித்தக மாகக் கலந்துவிட்டால்விளையும் அற்புதம், நம்புங்கள்!ஆசிரியர்:கற்றல் என்பதைத் தூண்டுகிறகருவிகள் தானே புத்தகங்கள்,மற்றதை நீங்கள் பார்க்கின்றீர்,மதியில் நன்றாய்ப் பதிக்கின்றீர்!எனினும் இதிலே ஒழுங்கில்லைஎன்றால் தொல்லை விளைந்துவிடும்,பனிபோல் நேரம் கரைந்துவிடும்,பாய்ந்தே வயதும் ஓடிவிடும்!பொழுதைப் போக்கப் பலகருவிபுதிதும் பழசும் இங்குண்டு,பழுதாய் அதனைப் பயன்படுத்தி பங்கம் ஆனவர் பலருண்டு!தினமும் எழுதுதல் நற்பயிற்சி,தெளிவும் ஒழுங்கும் தருமுயற்சி,மனத்தைச் செலுத்தி எழுதிவிட்டுமலர்ந்தே ஆடு, அதுமகிழ்ச்சி!