உள்ளூர் செய்திகள்

கர்நாடகாவில் புதிய நகரம்

பெங்களூருவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், கர்நாடக மாநில அரசு புதிதாக தொழில் நகரம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. பெங்களூருவுக்கு அருகில் உள்ள கோலார் தங்கவயல் பகுதியில், 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்நகரம் உருவாக்கப்பட உள்ளது. பெங்களூருவில் வசிக்கும் 20 லட்சம் பேரை, புதிய நகரத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ள கர்நாடக அரசு, குடிநீர்த் தேவைக்காக, கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலையை நிறுவ உள்ளது. கோலார் தங்கவயல் நிலத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, கர்நாடக நகர வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய நகரத்தை உருவாக்கும் பணிக்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !