நான்கில் ஒன்று சொல்
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. தமிழகத்திலேயே எந்த அரசு மருத்துவமனையில் முதன்முறையாக, ரத்த பரிசோதனை முடிவுகள் விரைந்து கிடைக்கும் வகையில், பார்கோடு மற்றும் ஆன்லைன் பதிவு முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது?அ. மதுரைஆ. சென்னைஇ. கோவைஈ. திருச்சி2. மருத்துவ காரணங்களுக்காகச் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி?அ. வெங்கையா நாயுடுஆ. ஜக்தீப் தன்கர்இ. நரேந்திர சிங் தோமர்ஈ. ஹமீத் அன்சாரி3. இந்தியா உடன் எந்த நாடு, வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், சமீபத்தில் கையெழுத்திட்டு உள்ளது?அ. அமெரிக்காஆ. பிரிட்டன்இ. சீனாஈ. ரஷ்யா4. உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமான கேரளத்தின் முன்னாள் முதல்வரான வி.எஸ். அச்சுதானந்தன், எந்தக் கட்சியின் மூத்த தலைவராவார்?அ. காங்கிரஸ்ஆ. பாரதிய ஜனதாஇ. கேரள காங்கிரஸ்ஈ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்5. ஹங்கேரியில் நடந்த சர்வதேச மல்யுத்த தரவரிசை தொடர் போட்டியில், 'பிரீஸ்டைல்' 72 கிலோ பிரிவில், இந்திய வீராங்கனை ஹர்ஷிதா வென்ற பதக்கம்?அ.தங்கம்ஆ. வெள்ளிஇ. வெண்கலம்ஈ. பிளாட்டினம்6. கார் விபத்தில் சிக்கி, 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த எந்த நாட்டின் இளவரசரான அல்வாலீத் பின் காலித் பின்தலால், சமீபத்தில் மரணமடைந்தார்?அ. ஜோர்டான்ஆ. குவைத்இ. சௌதி அரேபியாஈ. லெபனான்விடைகள்: 1.இ, 2.ஆ, 3.ஆ, 4.ஈ, 5.அ, 6. இ