உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' போல், இந்தியாவின் வான்பரப்பைப் பாதுகாக்க எந்தத் திட்டம் தயாராகி வருவதாக, சுதந்திர தின விழா உரையில், பிரதமர் மோடி தெரிவித்தார்?அ. டிஜி யாத்ராஆ. மிஷின் மதுமேகாஇ. சுதர்சன சக்ரா ஈ. உதே தேஷ்கா2. இஸ்ரேலில் நடந்த, ஜெருசலேம் கிராண்ட்ஸ்லாம் தடகளப் போட்டியில், 2000 மீ. ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில், இலக்கை அதிவேகத்தில் (6 நிமிடம், 13.92 விநாடி) கடந்து புதிய தேசிய சாதனைப் படைத்த இந்திய வீராங்கனை?அ. அங்கிதா தியானிஆ. லலிதா சிவாஜிஇ. பருல் சவுத்ரிஈ. சுதா சிங்3. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்தூக்கிகளில் (லிஃப்ட்), மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதால், ஆண்டுதோறும் எவ்வளவு மின்தூக்கிகள் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது?அ. 30,000ஆ. 25,000இ. 10,000ஈ. 40,0004. அடுத்த இரண்டு ஆண்டுகளில், தனியார் துறையில் எவ்வளவு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஊக்குவிக்கும், 'பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்ஹர் யோஜனா' திட்டத்தை, பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார்?அ. 2.50ஆ. 1.50இ. 3.50ஈ. 4.505. வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில், 'இண்டி' கூட்டணி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி யார்?அ. சஞ்சீவ் கன்னாஆ. சுதர்ஷன் ரெட்டிஇ. ஹிமா கோஹ்லிஈ. அனிருத்தா போஸ்6. உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமான நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், எந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த ஆரசியல்வாதி ஆவார்?அ. தி.மு.க.ஆ. காங்கிரஸ்இ. அ.தி.மு.க.ஈ. பாரதிய ஜனதாவிடைகள்: 1. இ,2. அ.3. ஆ,4. இ,5. ஆ,6. ஈ,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !