உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்!

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. இந்திய பார்லிமென்ட் வரலாற்றிலேயே முதன்முறையாக, நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், லோக்சபா எம்.பி.க்களின் 160 உரைகள், அவர்களின் தாய்மொழியிலேயே நிகழ்த்தப்பட்டு உள்ளன. இதில் எத்தனை உரைகள் தமிழில் நிகழ்த்தப்பட்டு, முதலிடத்தைப் பிடித்துள்ளது?அ. 40ஆ. 30இ. 50ஈ. 252. இஸ்ரோ சமீபத்தில் விண்ணில் ஏவிய, வணிக ரீதியிலான, 'புளூபேர்ட் பிளாக் 2' எனும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளைச் சுமந்துச் சென்ற, 'பாகுபலி ராக்கெட்' என அழைக்கப்படும் ராக்கெட்டின் பெயர் என்ன?அ. எல்.வி.எம். - 3 ஆ. ஜி.எஸ்.எல்.வி. - 6இ. எல்.எல்.வி. - 10ஈ. பி.எஸ்.எல்.வி. - 83. உத்தரகண்டில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லை வரை செல்லும் நீலாபானி-முலிங் லா இடையே, எத்தனை அடி உயரத்தில், 32 கி.மீ. தூரத்திற்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மலைச்சாலை அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு தொடங்கி உள்ளது?அ. 10000ஆ. 16000 இ. 8000ஈ. 200004. உலகின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான வைரங்களில் ஒன்றான புளோரென்டைன் வைரம், 100 ஆண்டுகளுக்குப் பின், எந்த நாட்டில் உள்ள வங்கி ஒன்றின் பெட்டகத்தில் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது?அ. கனடா ஆ. ரஷ்யாஇ. டென்மார்க்ஈ. சிங்கப்பூர்5. இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் நடத்தப்படும், விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடரில், ராஞ்சியில் நடந்த பீகார் - அருணாச்சலப் பிரதேச அணிகளுக்கான போட்டியில், எந்த அணி 50 ஓவரில் 574 ரன் குவித்து, உலக சாதனைப் படைத்துள்ளது?அ. அசாம்ஆ. பீகார்இ. குஜராத்ஈ. சிக்கிம்விடைகள்: 1. இ, 2. அ, 3. ஆ, 4. அ, 5. ஆ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !