உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. இந்தியாவில் உள்ள எந்த யூனியன் பிரதேசத்தில், ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது?அ. புதுடில்லிஆ. சண்டிகர்இ. லடாக்ஈ. புதுச்சேரி2. 'நாஸ்காம்' எனும் மென்பொருள், சேவை நிறுவனங்களுக்கான தேசிய சங்கத்தின் தலைவராக, புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளவர்?அ. ஸ்வேதா சங்கர்ஆ. சிந்து கங்காதரன்இ. செளமியா சேகர்ஈ. லலிதா நடராஜன்3. முப்பதாயிரம் கிலோ எடை செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் வகையில், 1,000 டன் எடையுள்ள பிரமாண்ட ராக்கெட் வடிவமைக்கும் பணியை, இஸ்ரோ தொடங்கியுள்ளது. அந்த ராக்கெட்டின் பெயர் என்ன?அ. சூர்யாஆ. சந்திராஇ. நட்சத்திராஈ. சுவஸ்திக்4. மகப்பேறு விடுமுறைக்குப் பின் பணிக்குத் திரும்பும், எந்தத் துறையைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளைப் பராமரிக்க வசதியாக, அவரின் குடும்பத்தார் வசிக்கும் மாவட்டங்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்குப் பணி மாறுதல் பெறலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது?அ. மருத்துவம்ஆ. காவல்இ. ஆசிரியர்ஈ. துப்புரவு5. பொருளாதாரம் தொடர்பாக, ஆசிய அளவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆசியாவிலேயே முதல் பணக்கார கிராமமாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு கிராமம் கண்டறியப்பட்டு உள்ளது. அது எது?அ. மேட்டூர், கர்நாடகம்ஆ. ரங்டோய், அசாம்இ. மாதாபர், குஜராத் ஈ. ஷெட்பால், மஹாராஷ்டிரம்6. எளிதாகப் பணம் செலுத்துவதற்கு, யு.பி.ஐ. பரிவர்த்தனை வசதி இருப்பது போல், எளிதாகக் கடன் பெறவும், வழங்கவும், எந்தப் புதிய வசதி விரைவில் அமலாகும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்?அ. யு.ஓ.சி.ஆ. யு.பி.இ.இ. யு.எஸ்.ஐ.ஈ. யு.எல்.ஐ.7. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் அனைத்து சேவைகளைப் பெறவும், ஆன்லைன் வழியே கடன் பெறவும், சமீபத்தில் மொபைல் செயலி தொடங்கப்பட்டு உள்ளது. அதன் பெயர் என்ன?அ. கூட்டுறவு சங்கம்ஆ. கூட்டுறவுஇ. கோ-ஆப்ரேடிவ்ஈ. அரசு கூட்டுறவு8. அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும், சமீபத்தில் ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்?அ. ஹார்திக் பாண்டியாஆ. ரிங்கு சிங்இ. ராகுல்ஈ. ஷிகர் தவான்விடைகள்1. இ, 2. ஆ, 3. அ, 4. ஆ, 5. இ, 6. ஈ, 7. ஆ, 8. ஈ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !