உள்ளூர் செய்திகள்

பொறுப்புணர்வு தேவை

சமூக ஊடகங்கள் இன்றைக்கு வளர்ந்துகொண்டே வருகின்றன. அவற்றில் நல்ல விஷயங்கள் பகிரப்படுவதுபோல, வதந்திகளும் சேர்த்தே பரப்பப்படுகின்றன. இதனால் ஏற்படும் மோசமான விளைவுகள்பற்றி மக்களும் அறியாதவர்களாகவே உள்ளனர். சரி! மாணவர்கள் எப்படி உள்ளனர் என்பதை அறிய, சமூக வலைத்தளச் செய்திகளை நிஜம் என நம்புகிறீர்களா? என கேட்டிருந்தோம். கோவை, செட்டிபாளைம், ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கருத்தறிய, நேரில் சந்தித்தோம்.பரத், 9ஆம் வகுப்புமுன்னர் நம்பினேன். ஒருமுறை நல்ல மழை பெய்தது, 'இன்று பள்ளிகளுக்கு விடுமுறை'ன்னு 'வாட்ஸ்அப்'பில் தகவல் வந்தது. நம்பி, பள்ளிக்குச் செல்லவில்லை. அப்புறம்தான் அந்தச் செய்தி தவறு என்று தெரியவந்தது. இப்ப எல்லாம் எந்தத் தகவலாக இருந்தாலும், பெற்றோரிடம் விளக்கம் கேட்ட பின்னரே அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்.தினேஷ் கார்த்திக், 9ஆம் வகுப்புநிச்சயமாக இல்லை. இந்தத் தகவலை 10 பேருக்கு ஷேர் செய்யுங்கள், இன்று இரவுக்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். இல்லையெனில், உங்களுக்கு தீமை வந்து சேரும். இப்படியாக பல நம்பகத்தன்மையற்ற வதந்திகள் பகிரப்படுவது எல்லாம் இப்ப ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு நாளும் நான் இவற்றை நம்புவதில்லை. தீபக், 9ஆம் வகுப்புஇல்லை. எனக்குத் தெரிந்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் 70 சதவீத தகவல்கள் போலியானவையாகத்தான் இருக்கு. அதனால அப்படி பார்க்கும் செய்திகளை நான் ஷேர் செய்வதில்லை. அவசரமாக ஷேர் செய்து என்ன ஆகப்போகிறது? பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பார்த்தால் உண்மை தெரியப்போகிறது? ஆஷிகா, 7ஆம் வகுப்புஇல்லை. நம் போன் நம்பருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு. இந்த ஆன்லைன் லிங்க்கில் ஆச்சரியமான பரிசுகள் உள்ளன என்று வரும் செய்திகளை நம்பவேண்டாம்னு, எங்க ஆசிரியர்கள் வகுப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சுதீஸ்னா, 7ஆம் வகுப்பு வாட்ஸ்அப்பில், காலாவதியான தகவல்கள் அடிக்கடி வருகிறது. காணவில்லை, இரத்தம் தேவைன்னு இப்படி வரும் பல செய்திகளை, உறுதி செய்யாமல் அப்படியே பலரும் ஃபார்வர்டு செய்கிறோம். அதில் பலவும் ஓராண்டிற்கு முன்பு கேட்கப்பட்டவையாக உள்ளன. அடுத்தவர்களுக்கு அனுப்பும் முன், பொறுப்புணர்வுடன் அச்செய்திகளில் இருக்கும் எண்ணிற்குப் பேசி உறுதி செய்யவேண்டும். பர்ஹானா, 8ஆம் வகுப்புசமூக ஊடகங்களின் வரவால் கண்ணியமற்ற பல கொடூரமான செய்திகளும், படங்களும், பொய்களும் வேகமாகப் பகிரப்படுகிறது. சிலர் நல்லது செய்வதாக நினைத்து, எதையுமே ஆராயாமல் இப்படியான தகவல்களைத் திரும்பவும் ஷேர் செய்கின்றனர். உண்மையறியாத தகவல்களை எவரும் எப்பவும் பகிரக்கூடாது. இல்லையெனில் நாடு தாங்காது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !