உள்ளூர் செய்திகள்

ஆமையின் வயிற்றில் சில்லறை புதையல்

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பிடிபட்ட கடல் ஆமை ஒன்று, விசித்திரமான வயிற்றுடன் காணப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆமையின் வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது, ஆமையின் வயிற்றுக்குள் ஏராளமான உலோகப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது, ஆமையின் வயிற்றுக்குள் மலைபோல் சில்லறைக் காசுகள் குவிந்து கிடந்ததைப் பார்த்து, மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒன்றல்ல, இரண்டல்ல; 915 சில்லறைக் காசுகள் வெளியேற்றப்பட்டன. அவற்றின் எடை 5 கிலோ. 'பேங்காக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகள், கடலில் காசு போட்டால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையில், சில்லறைக் காசுகளை வீசுகின்றனர். அவற்றை சாப்பிட்ட ஆமை, பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது' என்று விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !