உள்ளூர் செய்திகள்

ரீலா? ரியலா?

1. வியாழனின் துணைக்கோளான சைல்லீன் (Cyllene) 2012ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.தவறு. சைல்லீன், பிப்ரவரி 9, 2003ஆம் ஆண்டே விஞ்ஞானி ஷெஃபர்டு (Scott S. Sheppard) குழுவினரால், ஹவாயில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதனுடைய ஆரம் வெறும் 1 கி.மீ. மட்டுமே. வியாழனிலிருந்து 2.38 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. வியாழனை ஒருமுறை சுற்றிவர 752 பூமி நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இது முற்காலத்தில் விண்வீழ்கல்லாக (Asteroid) இருந்து வியாழனின் ஈர்ப்பு விசையால் அதன் துணைக்கோள் ஆகிவிட்டது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.2. மியான்மர் நாட்டின் மிகப்பெரிய ஆறு ஐராவதி.உண்மை. ஐராவதி ஆறு 2,170 கி.மீ. நீளம் கொண்டது. மியான்மர் நாட்டின் மத்திய பகுதியில், வடக்கிலிருந்து தெற்காக ஓடுகிறது. இமயமலையில் இருக்கும் பனி, கோடை காலத்தில் உருகுவதாலும், மழைக்காலத்தில் மிக அதிகமான பருவமழையாலும் இந்த ஆறு தொடர்ந்து ஜீவ நதியாக உள்ளது. கோதுமை, அரிசி, சணல், எண்ணெய் வித்துகள் ஆகியவை இந்த ஆற்று நீரால் செழிப்பாக வளர்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !