ரீலா? ரியலா?
எனிஃப் (Enif) நட்சத்திரம் சூரியனைவிட சிறியது.தவறு. எப்ஸிலான் பெகாசி (Epsilon pegasi) என்று அழைக்கப்படும் இந்த ராட்சத எனிஃப் நட்சத்திரம், சூரியனைவிட 11.7 மடங்கு அதிக நிறையை உடையது. இதன் ஆரம், சூரியனைப்போல் 185 மடங்கு அதிகம். இது பூமியிலிருந்து 690 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இது நொடிக்கு 8 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றுகிறது. இதன் வயது 2 கோடி ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்த நட்சத்திரம், சூரியனைவிட 3,895 மடங்கு பிரகாசமானது.ஆரோக்கியமான உடலுக்கு தாமிரச் சத்து அவசியம்.உண்மை. நம் உடல் நலத்திற்கு, தாமிரச் சத்து இன்றியமையாதது. சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யவும், நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் காக்கவும் தாமிரச் சத்து அவசியம். தாமிரச் சத்து குறைபாட்டால், இரத்தசோகை, இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறைதல், அசாதாரணமான இதயத் துடிப்பு, தைராய்டு பிரச்னைகள் ஆகியவை ஏற்படும். நம் உடலுக்குச் சராசரியாகத் தினமும் 900 - 1300 மைக்ரோ கிராம் அளவு தாமிரம் தேவை.