ரீலா? ரியலா?
நிபா வைரஸ் (Nipah virus) நாய்கள் மூலமாகப் பரவுகிறது.தவறு. நிபா வைரஸ் பழந்தின்னி வௌவால்கள் மூலம் பரவுகிறது. 1998இல் முதன்முதலில் மலேசியாவில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்தியாவில் 2018ஆம் ஆண்டு, கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இதன் பரவல் கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். கடும் காய்ச்சல், தலைவலி, மூளை வீக்கம், உடல் சோர்வு, மனக்குழப்பம் உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் வைரஸ் தாக்கிய 5 -- 14 நாட்களுக்குள் தென்படும். வைரஸால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தத் தடுப்பூசியும் இல்லை. சமீபத்தில் மீண்டும் கேரளத்தில் இத்தொற்று பரவியதாகச் செய்தி வந்தது.தைல மரம் (Eucalyptus) ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டது.உண்மை. இது மிர்டேசியே (Myrtacea) குடும்ப வகை மரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. தைல மரங்களில் 700க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ.லிருந்து 1,500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும். தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் (20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது.2 மீ. சுற்றளவு வரை வளரக்கூடியது. வறண்ட சமவெளிப் பகுதிகளில் வளரும் யூக்கலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை.