ரீலா? ரியலா?
ப்ருசெல்லோசிஸ் (Brucellosis) பாக்டீரியாத் தொற்றால் ஏற்படுகிறதுஉண்மை: ப்ருசெல்லோசிஸ் தொற்று புரூசெல்லா (Brucella) என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா கால்நடைகள், விலங்குகள், மனிதர்களைத் தாக்கக் கூடியது. ப்ருசெல்லோசிஸுக்குச் சிகிச்சையளிக்க ஆன்டிபயாடிக்குகள் பயன்படுகின்றன. ப்ருசெல்லோசிஸின் வகை, தீவிரத்தன்மையைப் பொறுத்து, சிகிச்சை பல வாரங்களிருந்து பல மாதங்கள்வரை நீடிக்கும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு: தண்ணீரைக் காய்ச்சிக் குடித்தல்; கால்நடைகள், விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும்போது பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுதல்; சமைக்கப்படாத அல்லது குறைவாக சமைக்கப்பட்ட இறைச்சி, பால் பொருட்கள் உண்பதைத் தவிர்த்தல்.பூச்சிகளுக்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் நேரடியான எந்தவிதத் தொடர்பும் இல்லைதவறு: பூச்சிகள், மகரந்தச் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்மையில், உலகில் உள்ள மகரந்தச் சேர்க்கை செயல்பாட்டில் 80 சதவீதம் பூச்சிகள் மூலம் தான் நிகழ்கிறது.பூச்சிகள் மகரந்தத்தை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு மாற்றுவதன் மூலம் இந்தச் செயல்முறை நிகழ்கிறது. பூச்சிகள் மலர்களில் உள்ள தேனைக் குடிக்க வரும்போது மகரந்தத்தைத் தங்கள் உடல் அல்லது கால்கள் மீது சுமந்து செல்கின்றன. சில பூச்சிகள் மகரந்தத்தை உணவாக உட்கொள்கின்றன. இவ்வாறு பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை என்டமோஃபிலி (Entomophily) என்று அழைக்கப்படுகிறது.தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், அந்துப்பூச்சிகள், வண்டுகள், குளவிகள் உள்ளிட்டவை மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளாகும்.