ரீலா? ரியலா?
நாடாப்புழுக்களின் உடல் பல துண்டுகளால் ஆனது.உண்மை. நாடாப்புழுக்களின் (Tapeworms) உடல் பல துண்டுகளால் ஆனது. ஒவ்வொன்றும் முட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. துண்டுகள் ப்ரோக்ளோ டிட்ஸ் (Proglottids) என்று அழைக்கப்படுகின்றன. இது தட்டைப் புழுத்தொகுதியில் உள்ள ஒட்டுண்ணி புழுவாகும். இந்தத் தொற்று, மலத்தின் மூலமாகப் பரவுகிறது.அதாவது புழுவின் முட்டை பாதிக்கப்பட்டவரது மலத்தில் இருக்கும். சரியாக சமைக்கப்படாத இறைச்சியின் மூலமாகவும் பரவும். நாடாப்புழுத்தொற்றுகள் பொதுவாக எந்தவிதமான அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால், சில சந்தர்ப்பங்களில் மட்டும் வயிற்று வலி, வாந்தி, குமட்டல், எடை இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.நீர் எலிகளுக்கு பற்கள் கிடையாது.தவறு. அமெரிக்கா, ஐரோப்பாவில் காணப்படும் நீர் எலிகள் நீளமான வெட்டும் பற்களைக்கொண்டுள்ளன. இந்தப் பற்கள் அதிகபட்சமாக 2.5 செ.மீ. நீளம் வரை உள்ளன.கொறியுண்ணிகளான இவற்றின் பற்கள் எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கும். இவ்விலங்கின் முன்பற்களில் இரும்பு காணப்படுகிறது. எனவே, இந்தப் பற்கள் துருப்பிடித்த இரும்பின் நிறமான ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கின்றன.இந்தப் பற்கள் வாழ்நாள் முழுவதும் உறுதியாகவும், அவற்றின் உணவை உண்ணவும், தன் இருப்பிடத்தைத் தயார் செய்யவும் உதவுகின்றன. இவற்றால் தங்கள் பற்களைப் பயன்படுத்தி, எறும்புகள், வெட்டுக்கிளிகள், பூச்சிகள் போன்ற சிறிய விலங்குகளைத் துல்லியமாக வெட்டவும், நசுக்கவும், துண்டிக்கவும் முடியும்.