நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.01. இந்தியாவில், ஆழ்கடல் வளங்களை கண்டறிய, 'சமுத்யரான்' என்ற திட்டம் தயாராகி வருவதாக, சமீபத்தில் பேசியவர்?அ. சோம்நாத் (இஸ்ரோ தலைவர்)ஆ. நரேந்திர மோடி (பிரதமர்)இ. திரெளபதி முர்மு (இந்திய ஜனாதிபதி)ஈ. சிவன் (இஸ்ரோ முன்னாள் தலைவர்)02. இந்திய வடகிழக்கு மாநிலமான எங்கிருந்து, அண்டை நாடான வங்கதேசத்தின் எல்லைப் பகுதி வரை, ரயில் இணைப்பு சேவை, சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது?அ. மிசோரம்ஆ. திரிபுரா இ. மணிப்பூர்ஈ. நாகாலாந்து03. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், 'விபத்தில்லா தமிழகம்' என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, இணைய செயலியின் பெயர் என்ன?அ. நம்ம ரோடுஆ. ரோட் சேப்டிஇ. சாலை பாதுகாப்புஈ. நம்ம சாலை04. நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், கடந்த மாதம் நடந்த தூய்மை பிரசாரத்தில், குப்பைகளை அப்புறப்படுத்தியதன் வாயிலாக, மத்திய அரசுக்கு எவ்வளவு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது?அ. ரூ.500 கோடிஆ. ரூ.400 கோடிஇ. ரூ.300 கோடிஈ. ரூ.200 கோடி05. மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், நாடு முழுவதும் இதுவரை எத்தனை வீடுகளில், குழாய் வாயிலாக குடிநீர், 'சப்ளை' செய்யும் பணி நிறைவடைந்து உள்ளதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது?அ. 50 சதவீதம்ஆ. 75 சதவீதம்இ. 70 சதவீதம்ஈ. 25 சதவீதம்06. இந்தியாவின் எந்த மாநிலத்தில், அரசு ஊழியர்கள், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது. விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது?அ. அசாம்ஆ. மேகாலயாஇ. அருணாச்சல பிரதேசம்ஈ. பீஹார்07. இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, விசா தேவையில்லை என, அறிவித்துள்ள நாடு?அ. ஆஸ்திரியாஆ. பிரான்ஸ்இ. இத்தாலிஈ. தாய்லாந்து08. சீனாவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான, 'பாரா'ஆசிய விளையாட்டு போட்டி வில்வித்தையில், ஒரே சீசனில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளவர்?அ. அதிதி சுவாமிஆ. சுதிப்தி ஹஜேலாஇ. ஷீத்தல் தேவிஈ. உஷா ராணி09. இந்தியாவின் எந்தப் பகுதியில், காற்று மாசு அபாய அளவை தாண்டியதை அடுத்து, குழந்தைகள், மூத்த குடிமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என, அரசு எச்சரித்துள்ளது?அ. சென்னைஆ. மும்பைஇ. பெங்களூருஈ. புதுடில்லி10. தமிழகத்திற்கு வரும் 23ஆம் தேதி வரை, எவ்வளவு கன அடி காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என, கர்நாடகத்துக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது?அ. 2,600ஆ. 2,000இ. 2,050ஈ. 2,110விடை: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. அ, 5. இ, 6. அ, 7. ஈ, 8. இ. 9. ஈ, 10. அ.