நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. இந்தியக் கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, பெண் அதிகாரி ஒருவர், போர்க் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார்?அ. பூஜா கெளசிக்ஆ. பிரார்த்தனா இ. கீர்த்தி ஷர்மாஈ. பிரேர்னா தியோஸ்தலி 2. கொரோனா காலத்தில், தடுப்பூசி வழங்கி உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, எந்த நாட்டின் உயரிய கெளரவ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?அ. பஹாமாஸ்ஆ. ஹெய்திஇ. டொமினிகாஈ. ஜமைக்கா3. அரசு நிர்வாகத்தைச் சீரமைப்பதற்கான ஆலோசனை வழங்க, எந்த இரு தொழிலதிபர்கள் தலைமையில், 'அரசு செயல்திறன்' எனும் துறையை, அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்?அ. ஓப்ரா வின்ஃப்ரே, பில்கேட்ஸ்ஆ. எலான் மஸ்க், விவேக் ராமசாமி 4. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில், நோயாளியுடன் வரும் பார்வையாளர்களுக்கு, பிரிவு வாரியாக எத்தனை வண்ணங்களில் கைப் பட்டைகள் வழங்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்?அ. மூன்றுஆ. இரண்டுஇ. நான்குஈ. ஐந்து5. பெண்கள் புர்கா அணியத் தடை விதித்துள்ள எந்த நாட்டின் அரசு, இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது?அ. ஆஸ்திரேலியாஆ. சுவிட்சர்லாந்துஇ. செளதி அரேபியாஈ. இஸ்ரேல்6. பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில், தமிழகம் எந்த இடத்தில் உள்ளதாக, இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கெளன்சில் தலைவர் அருண்குமார் கரோடியா தெரிவித்தார்?அ. முதலாவதுஆ. இரண்டாவது இ. மூன்றாவதுஈ. நான்காவது7. பெண்ணின் திருமண வயதை, 18இல் இருந்து, ஒன்பதாகக் குறைக்க, எந்த மேற்காசிய நாடு முடிவு செய்துள்ளது?அ. ஈராக்ஆ. ஜோர்டான்இ. குவைத்ஈ. ஈரான்8. சென்னையில் நடந்த, கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் 2வது சீசனில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், எந்த நாட்டின் வீரரான லெவான் ஆரோனியனை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றார்?அ. ரஷ்யாஆ. சீனாஇ. அமெரிக்காஈ. இத்தாலிவிடைகள்: 1. ஈ, 2. இ, 3. ஆ, 4. இ, 5. ஆ, 6. ஆ, 7. அ, 8. இ.