அறிவியல் பிரசார விருது
பொதுமக்களிடையே அறிவியலை பிரசாரம் செய்தமைக்கான தேசிய விருதுக்கு, சென்னை கணினி அறிவியல் நிறுவனத்தில் விஞ்ஞானியாக உள்ள ஆர்.ராமானுஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 'துளிர்'அறிவியல் மாத இதழ் மூலம் 30 ஆண்டுகளாக பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக, 2020ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அறிவியல் பிரசார விருது வழங்கப்படுகிறது.