சர்வர் குரங்கார்!
மனிதர்கள் செய்யும் வேலைகளுக்கு ரோபோக்களை களத்தில் இறக்கும் நாடு ஜப்பான். அதே ஜப்பானில், ஓர் உணவு விடுதி, பரிமாறுபவராக குரங்குகளைப் பயன்படுத்துகிறது. தேவையான உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தால் போதும், சரியான மேசையை அடையாளம் கண்டு, வாடிக்கையாளர்கள் கேட்ட உணவை எடுத்துக்கொண்டுவந்து குரங்கு கொடுக்கிறது. இந்தப் புதுமையான அனுபவத்திற்காகவே இங்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வரத்தொடங்கி உள்ளனராம்.