தேதி சொல்லும் சேதி
மார்ச் 14, 1879 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாள்20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி. நவீன இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். சார்பியல் கோட்பாடு, குவான்டம், புள்ளியியல், எந்திரவியல், அண்டவியல் ஆகிய துறைகளிலும், பங்களிப்பு செய்துள்ளார். கோட்பாட்டு இயற்பியலில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.மார்ச் 14, 1988 - பை (π) நாள்கணிதத்தில் மிக முக்கியமான எண்ணாக π இருக்கிறது. அதன் மதிப்பு தோராயமாக 3.14 என வருவதால், மார்ச் 14ஐ 'பை அப்ராக்சிமேஷன் டே' (Pi Approximation Day) என்ற பெயரில் கணிதவியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.மார்ச் 15, 1983 - உலக நுகர்வோர் நாள்நுகர்வோரின் அடிப்படை உரிமைகளைக் கேட்பது; அதன் மீது நடவடிக்கை எடுப்பது; சந்தைக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவது போன்ற பல உரிமைகள் நுகர்வோருக்கு உண்டு. நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மார்ச் 16, 1955 - தேசிய தடுப்பூசி நாள்குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தடுப்பூசியின் பங்கு முக்கியமானது. கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படவும், இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.மார்ச் 18, 1858 - ருடால்ஃப் டீசல் பிறந்த நாள்டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்து, தொழில் வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தினார். நீராவி இன்ஜினுக்கு மாற்றாக 'கம்ப்ரெஷன் இக்னிஷன்' இன்ஜினைக் கண்டுபிடித்தார். கடைசியில் அந்த இன்ஜினுக்கு, அவர் பெயரே நிலைத்துவிட்டது. மார்ச் 18, 1775 - இந்திய தளவாடங்கள் நாள்இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், ராணுவத் தளவாடத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இது இந்திய அரசு நடத்தும், மிகப் பழமையான தொழில்துறை அமைப்பு. இங்கே ராணுவப் போர்க்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு, சோதனை செய்யப்படுகிறது. இந்திய அரசால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.