உள்ளூர் செய்திகள்

பாம்பு, பல்லி, வண்டு அபூர்வ புதை படிமம்

ஜெர்மனி நாட்டின் ஃபிராங்ஃபர்ட் நகரை அடுத்த மெஸ்செல் பிட் (Messel Pit) பகுதியில், தொல்பொருள் ஆய்வாளர்கள், அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரை, வாத்து உள்ளிட்டவைகளின் புதை படிமங்கள் (fossils) கிடைத்துள்ளன. சமீபத்தில் கிடைத்துள்ள பாம்பின் புதை படிமம் ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்துள்ளது.இதுதொடர்பாக, விஞ்ஞானி கிறிஸ்டர் ஸ்மித் கூறும்போது, 'மூன்றரை அடி நீள பாம்பின் படிமம் கிடைத்தது. அதன் வயிற்றுக்குள் பல்லி ஒன்று உள்ளது. அந்தப் பல்லிக்குள் வண்டு உள்ளது. இப்படி உணவுச்சங்கிலியைப் பிரதிபலிக்கும் துல்லியமான படிமங்கள், இதற்கு முன்னர் கிடைத்ததில்லை. அந்தப் பாம்பு, பல்லியை விழுங்கிய ஓரிரு நாளில், பாறையில் இறுகி உயிரிழந்திருக்க வேண்டும். இப்படிமம் 4.8 கோடி ஆண்டுகள் பழமையானது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !